கிழக்கு மாகாணத்தில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!!
கொழும்பு – கிழக்கு மாகாணத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாளை (20.01.2025) அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். இந்த முடிவு, மாணவர்களுக்கும் பாடசாலை பணியாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெற்று வந்தன. எனவே, 20.01.2025 ஆம் நாளில் நடைபெறவிருந்த தேர்வுகள் சனிக்கிழமை (25.01.2025) அன்று நடைபெற உள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், இந்த புதிய மாற்றங்களை கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த மாற்றங்கள், மாணவர்களின் பரீட்சைகள் பாதிக்காமல் நடத்தும் பொருட்டு எடுக்கப்பட்ட முடிவாகும்.
Srilanka Tamil News
0 Comments