Ticker

10/recent/ticker-posts

கொழும்பு துறைமுக உணவில் சுகாதார சீர்கேடு: ஊழியர்கள் குற்றச்சாட்டு!!

 துறைமுக உணவில் தரச்சேதம்

கொழும்பு துறைமுக சிற்றூண்டிசாலையில் கொள்வனவு செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் திருப்திகரமான தரம் மற்றும் சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 12ஆம் திகதி, கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஊழியர்கள், சமையலறையிலிருந்து பெறப்பட்ட உணவுப் பொட்டலத்தில் கரப்பான் பூச்சி இருந்ததாகவும், அண்மையில் சமையல் கருவிகளிலிருந்து உடைந்த துண்டுகள் உணவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து, துறைமுக சமையலறையின் உணவு தரத்தை மேம்படுத்துவதற்காக, மருத்துவர்கள் அடங்கிய குழுவொன்று உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எனினும், தொழிற்சங்கங்களின் செல்வாக்கால் உணவுப் பாதுகாப்பு குறைந்துள்ளதாக ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

துறைமுக அதிகாரசபையின் செயல்பாடுகள் குறித்து ஊழியர்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும், உணவு தரம் மற்றும் சுகாதார நெறிமுறைகளை மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

_Srilanka Tamil News_


Post a Comment

0 Comments