Ticker

10/recent/ticker-posts

இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான தகவல்!!

இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான தகவல்!!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் பெப்ரவரி 17 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

அநுரகுமார திசாநாயக் தலைமையிலான புதிய அரசாங்கம் தனது முதலாவது வரவு செலவுத்திட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில், அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளின் அதிகரிப்பு என்பவை முக்கிய அம்சமாக இருக்கும். குறிப்பாக, 2016ஆம் ஆண்டின் ஜனவரி முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு வழங்கப்படும் என்று பிரதியமைச்சர் அறிவித்தார்.

இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக நலன்களையும் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையப்போகின்றது.

_Srilanka Tamil News_


Post a Comment

0 Comments