Ticker

10/recent/ticker-posts

வெள்ளத்தில் சிக்கி மாயமான இருவர் சடலமாக மீட்பு!!

 வெள்ளத்தில் சிக்கி மாயமான இருவர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு, வாழைச்சேனை – புலிபாய்ந்தகல் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன இரண்டு பேர் நேற்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த இருவரும் சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 71 வயதுடையவர்கள் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள், சம்பவத்தன்று மாலை, புலிபாய்ந்தகல் பகுதியில் உள்ள பாலம் ஒன்றை கடக்க முயன்ற போது ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அறியப்படுகிறது.

காணாமல்போனவர்களுக்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான துயர சம்பவங்களைத் தவிர்க்க, வெள்ளப்பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Srilanka Tamil News



Post a Comment

0 Comments