ரணில் மற்றும் தினேஷிடம் CID விசாரணை: முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை தீவிரம்!!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல மருந்து இறக்குமதியில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளை விசாரிக்கும் வேளையில், இந்த விசாரணை முக்கியமாக இருக்கிறது.
தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் உள்ள ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பிய பின்னர், அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர்களின் தங்குமிடங்களுக்கு சென்று வாக்குமூலங்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சரவையில் இருந்த மற்ற உறுப்பினர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
_Srilanka Tamil News_
0 Comments