Ticker

10/recent/ticker-posts

மக்கள் வங்கி அறிவிப்பு: People's Pay Wallet செயலி சேவை தற்காலிகமாக நிறுத்தம்!!

 மக்கள் வங்கி அறிவிப்பு: People's Pay Wallet செயலி சேவை தற்காலிகமாக நிறுத்தம்!!

மக்கள் வங்கியின் People's Pay Wallet செயலி மேம்படுத்தப்படும் காரணமாக, குறித்த செயலியின் சேவை ஜனவரி 9 பிற்பகல் 11.00 மணி முதல் ஜனவரி 10 முற்பகல் 3.00 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்படும் என வங்கி அறிவித்துள்ளது.

அதேவேளை, வங்கியின் தனிநபர் இணைய வங்கியியல், பெருநிறுவன இணைய வங்கிச் சேவைகள், People's Wave, மற்றும் People's Wyn Mobile Banking App ஆகிய செயலிகள் மேம்படுத்தல் வேலைகள் நடந்து கொண்டிருந்தாலும், அந்த நேரத்தில் வழக்கம்போல் செயல்படும்.

மக்கள் வங்கி, இதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளதோடு, வாடிக்கையாளர்கள் இந்த நேரத்தில் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.

_Srilanka Tamil News_


Post a Comment

0 Comments