2024இல் நாய் கடிக்குள்ளாகிய ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேர்!!
கடந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை சுமார் 184,926 பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நாய் கடிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசாங்கம் 850 முதல் ரூ. 1,000 மில்லியன் ரூபாய்கள் வரை செலவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024இல் நாய் கடிக்குள்ளாகிய ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேர் | 80K People Bitten By Dogs In 2024
நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்பின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கடந்த ஆண்டு கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
_Srilanka Tamil News_
0 Comments