Ticker

10/recent/ticker-posts

நெற்றியில் 3 முத்தம்.. வகுப்பறையில் டீச்சருக்கு பொட்டு வைத்து திருமணம் செய்த மாணவர்!!

நெற்றியில் 3 முத்தம்.. வகுப்பறையில் டீச்சருக்கு பொட்டு வைத்து திருமணம் செய்த மாணவர்!

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் அமைந்துள்ள மவுலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக உளவியல் துறையின் பேராசிரியர் பாயல் பானர்ஜி, முதலாம் ஆண்டு மாணவருடன் வகுப்பறையில் திருமண சடங்குகளை நடத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பேராசிரியர் மணப்பெண் போல, மாணவர் மாப்பிள்ளை போல அலங்கரிக்கப்பட்டு,நெற்றியில் திலகம் இடுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து திருமணச் சடங்குகளும் நடந்தன.

இந்த நிகழ்வை வகுப்பறையில் இருந்த மாணவர்கள் வீடியோ எடுத்தனர், பின்னர் அது இணையத்தில் பரவியது.

பேராசிரியர் இது ஒரு உளவியல் தொடர்பான ஆவணப்படம் தயாரிக்க செய்யப்பட்ட நிகழ்வாக விளக்கம் அளித்துள்ளார்.

துணைவேந்தர் தபஸ் சக்ரவர்த்தி கூறுகையில்,

 “அந்த பேராசிரியை ஒழுக்கக்கேட்ட செயல்களில் ஈடுபடவில்லை. இது முற்றிலும் பாடம் சார்ந்த நிகழ்வு. ஆனால், வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவருக்கு தற்காலிக விடுப்பு அளித்துள்ளோம். விசாரணை முடியும் வரை, மாணவரும் வகுப்புகளுக்கு வர வேண்டாம்” என்று தெரிவித்தார்.

மூன்று பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.பேராசிரியர் மற்றும் மாணவருக்கு தற்காலிக விடுப்பு வழங்கப்பட்டது.

விசாரணை முடியும் வரை மாணவர் வகுப்புகளுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் இந்த வீடியோ குறித்து விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலரும் ஒரு பேராசிரியர் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை முடிந்த பிறகே உண்மை நிலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

_Srilanka Tamil News


Post a Comment

0 Comments