Ticker

10/recent/ticker-posts

4 நாட்களில் வசூலை வாரிக்குவித்த டிராகன் படம்.. இத்தனை கோடியா!!

 4 நாட்களில் வசூலை வாரிக்குவித்த டிராகன் படம்.. இத்தனை கோடியா!!

"டிராகன்" படம் 4 நாட்களில் ரூ. 59 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகிய "டிராகன்" திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ. 59 கோடி வசூல் செய்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம், "லவ் டுடே" படத்திற்கு பிறகு பிரதீப் - ஏஜிஎஸ் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம்.


அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில், விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் போன்ற யூடியூப் பிரபலங்களும் முக்கிய பங்கை வகிக்கின்றனர்.

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற "டிராகன்" திரைப்படம், இன்றைய நிலவரப்படி 59 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதிக்குள் ரூ. 100 கோடியைத் தாண்டி ப்ளாக் பஸ்டர் "லவ் டுடே" படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

Srilanka Tamil News

Post a Comment

0 Comments