Ticker

10/recent/ticker-posts

இம்மாத இறுதியில் நாட்டிற்கு வரவுள்ள வாகனங்கள் தாங்கிய கப்பல்!!குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலை 5,500,000 ரூபாயிலிருந்து 6,000,000 ரூபாய்க்கு இடைப்பட்டு இருக்கும்!!

 இம்மாத இறுதியில் நாட்டிற்கு வரவுள்ள வாகனங்கள் தாங்கிய கப்பல்!

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் வாகனங்களைத் தாங்கிய கப்பல் இலங்கை வந்தடைவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் அனைத்து வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.


இதனால், வாகனங்கள் இறக்குமதி செய்யும் பணியில் கடன் கடிதங்கள் விடுவிக்கப்பட்டு, அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் தொடர்ந்து வாகனங்கள் வரவிருக்கும் என சங்கத் தலைவர் பிரசாத் மானகே கூறியுள்ளார். இதனை ஒட்டிய முற்பணம் செலுத்தி மோசடி செய்யும் நிறுவனங்களிடம் ஏமாறாமல் நுகர்வோர் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்போது, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலை 5,500,000 ரூபாயிலிருந்து 6,000,000 ரூபாய்க்கு இடைப்பட்டு இருக்குமெனவும் அவர் கூறினார்.

Srilanka Tamil News 

Post a Comment

0 Comments