9 வயது சிறுமி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு – 48 வயது சந்தேகநபர் கைது!!
குருணாகல், ஹெட்டிபொல: மகுலகமவில் பகுதியில் பன்றிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு (27) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், சிறுமி மற்றும் அவரது பாட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், உடனடியாக குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், தீவிர காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 48 வயதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 12 போர்துப்பாக்கிகள் மற்றும் 2 வெற்று குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்த சிறுமியின் உடல் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பாட்டி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிஸார் இந்த சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்து, சந்தேகநபரின் ஆயுதங்களை வைத்திருந்ததற்கான காரணங்களை விசாரணை செய்து வருகின்றனர்.
Srilanka Tamil News
0 Comments