Ticker

10/recent/ticker-posts

இலங்கையில் வாகன இறக்குமதி மீண்டும் தொடக்கம்!!

 இலங்கையில் வாகன இறக்குமதி மீண்டும் தொடக்கம்!!

(கொழும்பு) – பெப்ரவரி 1 முதல், அனைத்து வகையான வாகனங்களின் இறக்குமதி மீண்டும் தொடங்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவு, நாட்டின் பொருளாதாரத்தினை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய ஜனாதிபதி, டொலர் வீதம் உயர்ந்திருப்பதாலும், இறக்குமதி மீண்டும் தொடங்குவதால் சந்தையில் திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதாலும், ஆரம்பத்தில் வாகன விலைகள் அதிகமாக இருக்கலாம் என்று கூறினார். மேலும், வாகனங்களுக்கான தேவை திடீரென அதிகரித்தால், நாட்டின் பொருளாதாரத்துக்கு மற்றொரு நெருக்கடி ஏற்படலாம் என்பதால், சில வரிகளை விதிக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்

ஜனாதிபதி திஸாநாயக்க, சந்தையின் நிலைமைக்கு ஏற்ப, வரிகளை குறைத்து வாகன விலைகளை நிலையான ஒரு கட்டத்திற்குக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார். இந்த முடிவால், நிலையான இறக்குமதி முறையை உருவாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இந்த நடவடிக்கை, கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் வாகன சந்தையில் ஏற்பட்ட மந்தநிலைக்கு ஒரு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments