வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் சட்டத்தரணி கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!
வவுனியா – கஞ்சாவை உடமையில் வைத்திருந்ததாக மற்றும் அதனை கொண்டு சென்றதாக குற்றச்சாட்டில், ஒரு இளம்சட்டத்தரணி குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். இதன்படி, அவர் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு தொடர்பாக, 2021 ஆம் ஆண்டு விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், செட்டிகுளம் பகுதியில் சட்டத்தரணி மீது சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், அவர் உடமையில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, அவர் கைது செய்யப்பட்டு, செட்டிகுளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையின் பின்னர், குறித்த சட்டத்தரணி விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார். இன்று (28.02) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, அவர் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
Srilanka Tamil News
0 Comments