பரந்தனில் சிக்கிய ஒரு தொகை கேரள கஞ்சா : இருவர் கைது!!
கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் மீன் போக்குவரத்து வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 400 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தரவின் அடிப்படையில், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போது, இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேரளக் கஞ்சா கடத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகச் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், சட்டத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Tamil News
0 Comments