மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - பொலிஸார் வெளியிட்ட தகவல்!!
கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை, 46 வயதான கயானி தில்ருக்ஷி குமாரி என்பவரை அவரது கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தார். இவர் மூன்று பிள்ளைகளின் தாயாக இருந்தார்.
தகவலின்படி, கொலை செய்யப்பட்ட கயானி தில்ருக்ஷி, தனது மகளின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கணவன் வீட்டுக்குள் நுழைந்து, கொலை செய்ததாக மகளால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு கொலைச் செய்த கணவன், குடும்பத் தகராறுகள் காரணமாக சில காலமாக மனைவியுடன் பிரிந்து வாழ்ந்திருந்தார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, சந்தேக நபர் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். குற்றம் சம்பந்தமான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு கொலைச் செய்யப்பட்ட கயானி தில்ருக்ஷி குமாரியின் சடலம், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மருத்துவமனையில் அனுப்பப்பட்டுள்ளது.
_Srilanka Tamil News
0 Comments