Ticker

10/recent/ticker-posts

காதலித்த மகள்.. முட்டை பொரியலில் "அதை" கலந்து தந்த அம்மா..!!

 காதலித்த மகள்.. முட்டை பொரியலில் "அதை" கலந்து தந்த அம்மா..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை கைவிடாத மகளை தாய் விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடபொன்பரப்பி பகுதியில் வசிக்கும் முனுசாமி - மல்லிகா தம்பதியினரின் மகள் குறிஞ்சி (20), சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.


இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த சாய்குமாருடன் குறிஞ்சி பழகினார். பின்னர் இருவருக்கும் காதல் இதற்குத் தாயார் மல்லிகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மகளை காதலை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியும், குறிஞ்சி அதை ஏற்க மறுத்தார்.


இதனால் கோபமடைந்த மல்லிகா, முட்டை பொரியலில் விஷம் கலந்து மகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை சாப்பிட்ட குறிஞ்சி மயங்கி விழுந்த நிலையில், அவரை உடனடியாக அவரது தந்தை மற்றும் சகோதரர் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குறிஞ்சிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறிஞ்சியின் புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, மல்லிகாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலிலும், குடும்ப உறவுகளிலும் வன்முறையற்ற சமரச தீர்வுகளின் அவசியம் மீண்டும் பேசப்படும் சூழ்நிலையை இது உருவாக்கியுள்ளது.


_Srilanka Tamil News

Post a Comment

0 Comments