வவுனியாவில் இளைஞர் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!!
வவுனியா, தவசிகுளம் பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடக்கியுள்ளது.
நேற்றைய தினம் (03) நடைபெற்ற போட்டியின் போது, இரண்டு அணிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியது. இதில், சிலர் மைதானத்திற்குள் நுழைந்து, விளையாட்டில் ஈடுபட்ட இளைஞரை தாக்கியதுடன், வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் கதிரைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது முறைப்பாட்டின் அடிப்படையில் வவுனியா பொலிஸார் சம்பவத்திற்கான காரணங்களை தீர்மானித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் சாட்சியங்களை சேகரித்து, சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
@Srilanka Tamil News
0 Comments