கொழும்பிலிருந்து சென்ற ரயிலை இடைநடுவில் விட்டுச்சென்ற ஓட்டுநர் : கடும் சிரமத்தில் பயணிகள்!!
ரயில் ஓட்டுநர் தப்பிய சம்பவம் – விசாரணை ஆரம்பம், பணி இடை நீக்கம்
மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி சென்ற ரயில் எண் 50இன் ஓட்டுநர், கொக்கல ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்திவிட்டு திடீரென தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக 500க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என ரயில்வே துணைப் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட ஓட்டுநர் உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மதியம், ரயில் கொக்கல ரயில் நிலையத்தை அடைந்தவுடன், ஓட்டுநர் திடீரென தனது உடல்நிலை சரியில்லையென தலைமை அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் ரயிலை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
ஓட்டுநர் இல்லாத நிலை காரணமாக, ரயில் நிலைதடுமாறியது. பயணிகள் சில மணி நேரம் அங்கு பரிதவிப்பதற்குள்ளாகினர். பின்னர், கொக்கல ரயில் நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, பயணிகளை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரயில்வே துறை உறுதியளித்துள்ளது.
Srilanka Tamil News
0 Comments