Ticker

10/recent/ticker-posts

யாழ். செம்மணியில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள்!!

 யாழ். செம்மணியில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள்!!

யாழ்ப்பாணம், மார்ச் 1: யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை பகுதியில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தில் சட்ட வைத்திய அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையில், மீட்கப்பட்ட எலும்புகளில் பெரும்பாலானவை மனித எலும்புகளாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

நீதவான் எதிர்வரும் மார்ச் 4 ஆம் தேதி மன்றில் கலந்துரையாடல் நடத்தி, மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

காலநிலையை கருத்தில் கொண்டு ஸ்கேனிங் (Scanning) மூலம் குறித்த இடத்தை முழுமையாக ஆய்வு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மீட்கப்பட்ட எலும்புகள் எந்த காலத்துக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்த, அவற்றை விஞ்ஞான ஆய்வுக்காக அனுப்ப நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிருபாகரன் என்பவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீதமுள்ள பகுதிகளில் மேலும் எலும்புக்கூடுகள் இருக்க வாய்ப்புள்ளதா? இது ஒரு பழைய மாபெரும் மண்ணறையா? அல்லது வேறு சம்பவத்தால் ஏற்பட்டதா? என்பதற்கான விடைகள் எதிர்வரும் விஞ்ஞான பரிசோதனை மற்றும் ஸ்கேனிங் ஆய்வுகளின் மூலம் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments