யாழில் நகைகள் கொள்ளை: சந்தேக நபர்கள் கைது!!
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடிய சம்பவம் தொடர்பாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 3ஆம் திகதி குறித்த வீடில் நகைகள் திருடப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் நேற்றைய தினம் (பிப்ரவரி 7) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள், பணம் மற்றும் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது, சந்தேக நபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Srilanka Tamil News
0 Comments