மல்லாவி பொலிஸ் உத்தியோகத்தர் பாடசாலையில் துஸ்பிரயோக முயற்சியில் கையும் களவுமாக மாட்டினார்!!
மல்லாவி யோகபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமொன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மல்லாவி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ரஞ்சித், யோகபுரம் பாடசாலைக்குள் புகுந்து, மாணவிகளை மலசல கூடத்துக்கு வருமாறு அழைத்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட முற்பட்டுள்ளார்.
இவ்விவகாரம் பாடசாலை மாணவர்களால் கவனிக்கப்பட்டதுடன், உடனடியாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கையும் களவுமாக பொதுமக்கள் கவனத்திற்கு சிக்கியுள்ளார்.
இந்நிலையில், பாடசாலை அதிபர் சம்பவத்தை மறைக்க முற்பட்டதாகவும், இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Srilanka Tamil News
0 Comments