இளம் பெண்களை மிரட்டி பெருந்தொகை பணம் பெற்ற நபருக்கு நேர்ந்த கதி!!
அவிசாவளை – இளம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கண்டி பிலிமதலாவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரி எனக் கூறி பலரை மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் பணமோசடி தொடர்பாக 5 பிடியாணைகளுக்கு உள்ளாகியுள்ளதோடு, போதைப்பொருள் தொடர்பான 2 பிடியாணைகளும் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், சமூக ஊடகங்கள் மற்றும் இணைய தளங்கள் மூலமாக இளைஞர்கள் எளிதில் ஏமாறும் நிலை உருவாகியுள்ளது. எனவே, புதிய நபர்களுடன் தொடர்பு கொள்ளும் போது பாதுகாப்பாக இருக்கவும், சந்தேகமான எந்த ஒரு செயல்பாடும் இருந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
- Srilanka Tamil News
0 Comments