யாழில் இளைஞனை சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிஸார்!!
யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் பொலிஸாரால் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களின் தாக்குதலால் தனது கையும் முறியுண்டுள்ளதாகவும் ஒரு இளைஞன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று (24) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் செய்தியாளர்களிடம் தனது நிலைமையை வெளிப்படுத்தினார்.
குறித்த இளைஞன் தனது அறிக்கையில்,
கடந்த 18ஆம் தேதி, தனது அம்மாவின் வீட்டிற்கு அருகிலுள்ள ஆலயத்தின் முன்பாக நின்றிருந்த போது, முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸார் தன்னிடம் வந்ததாகவும்,
அங்கு எந்த காரணமுமின்றி தன்னை தாக்கி, கைவிலங்குடன் முச்சக்கர வண்டியின் உள்ளே கீழே தள்ளியதாகவும்,
பின்னர், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ‘கேபிள் வயர்கள் வெட்டிய சம்பவம்’ தொடர்பாக விசாரணை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தாக்குதலால் தனது கையில் கடும் வலி ஏற்பட்டதாகவும், தானே மருத்துவ உதவி கோரிய பிறகே அவரை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் அவர் கூறினார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மீது எந்தவொரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. பாதிக்கப்பட்ட இளைஞனும், அவரது குடும்பத்தினரும் நீதிக்காக சட்ட நடவடிக்கைகள் எடுப்பார்களா என்பது எதிர்வரும் நாட்களில் தெளிவாகும்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் தரப்பில் எந்தவொரு விளக்கமும் இன்னும் வழங்கப்படவில்லை.
Srilanka Tamil News
0 Comments