விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் கமராவை அறிமுகப்படுத்தியது சீனா!!
சீனா அறிமுகப்படுத்திய அதிநவீன விண்வெளி உளவு கேமரா – உலகளாவிய கண்காணிப்பில் புதிய யுகம்!
சீன விஞ்ஞானிகள் விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளவர்களின் முகங்களை அடையாளம் காணும் அதி திறன் கொண்ட உலகின் சக்திவாய்ந்த உளவு கேமராவை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
100 கிலோமீட்டர் தொலைவில் இருந்து சூப்பர் கிளாரிட்டி!
இந்த மேம்பட்ட காட்சி தொழில்நுட்பம் விண்வெளியில் இருந்து 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் உள்ள பொருள்களை மில்லிமீட்டர் அளவிலான விவரங்களுடன் பதிவு செய்யும் திறன் கொண்டதாக உள்ளது. இது உலகளாவிய உளவு மற்றும் பாதுகாப்பு துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் செயற்கைக்கோள்கள் மூலம் வேகமாக தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளாவிய கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், முகவர்களின் இயக்கங்களை கண்காணித்தல் மற்றும் பெரிய நகரங்களை பகுப்பாய்வு செய்வது போன்ற பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்த முடியும்.
இந்த புதிய உளவு உபகரணம் தகவல் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் சர்வதேச பாதுகாப்பு குறித்து பெரும் விவாதங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மேலும், அமெரிக்கா, ரஷ்யா போன்ற முன்னணி நாடுகள் இதற்கெதிராக எவ்வாறு பதிலளிக்கும் என்பதும் எதிர்பார்க்கப்படும்.
0 Comments