வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மீது முறிந்து விழுந்த மரம்!!
வவுனியா, குருமன்காடு பகுதியில் இன்று (22.02.2025) முச்சக்கர வண்டி மீது மரம் திடீரென விழுந்ததில், வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது.
வவுனியா, மன்னார் வீதி, குருமன்காடு சந்தியில் உள்ள தனியார் மருத்துவமனை முன்பாக நடந்தது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரம் திடீரென விழுந்தது. வண்டியில் முதிய பெண் ஒருவர் பயணித்திருந்தார். மரம் விழுந்ததை அவதானித்த பெண் வண்டியில் இருந்து உடனே இறங்கி ஓடினார், இதனால் அவர் எந்தவொரு பாதிப்புகளும் இல்லாமல் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் மற்றும் அதிகாரிகள் திடீர் மரம் விழுந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, வண்டி சேதம் குறித்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
0 Comments