மட்டக்களப்பில் அரச பேருந்து ஊழியர்களை தாக்கிய இருவர் கைது!!
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸார், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய இருவரை கைது செய்துள்ளனர்.
இந்நிகழ்வு 20ம் தேதி இரவு புல்லுமலை பிரதேசத்தில் இடம்பெற்றது. பதுளையில் இருந்து புல்லுமலை ஊடாக மட்டக்களப்புக்கு செல்லும் அரச பேருந்து சாரதி மற்றும் நடத்துனர், புல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை கேலி செய்ததாக அந்த யுவதி உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து புல்லுமலை தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட போது, அங்கு காத்திருந்த இருவர், சாரதி மற்றும் நடத்துனருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த இருவரை கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் தொடர்பாக, கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Tamil News
0 Comments