பொலிஸாரால் பொதுமக்களுக்கு துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
கொழும்பு: பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் குற்றவியல் விசாரணைகளைத் தடுக்கும் மற்றும் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்தார்.
இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பொலிஸாரின் செயல்பாடுகளுக்கு தடையாக செயல்படுபவர்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், பொலிஸாரின் குற்ற தடுப்புச் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த, 1997 என்ற புதிய துரித தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் நேரடியாக தகவல் வழங்க இந்த சேவை பயன்படுத்தலாம்.
அதிகாரிகள் இந்த முயற்சிகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
0 Comments