Ticker

10/recent/ticker-posts

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!!

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!!

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்க எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், அரச சேவையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


இதற்கிடையில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பள உயர்வு, அரச ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மற்றும் நிலுவையில் உள்ள பென்ஷன் மற்றும் இலாபங்களை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

👉🏻Srilanka Tamil News


Post a Comment

0 Comments