கொழும்பில் பொலிஸார் துப்பாக்கி சூடு!!
கொழும்பு: நுரைச்சோலையில் இருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகள் கொண்டு சென்ற லொறி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லொறி திருடப்பட்டதாக அதன் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, வெல்லம்பிட்டிய மற்றும் கடுவெல பகுதிகளில் அது பயணித்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை அடையாளம் கண்ட பொலிஸார், லொறியை நிறுத்திச் சோதனை நடத்த முயன்றனர். எனினும், சாரதி பொலிஸாரின் உத்தரவை மீறி தப்பிச் செல்ல முற்பட்டதால், பொலிஸார் லொறியின் சக்கரங்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன் விளைவாக, லொறி நிறுத்தப்பட்ட நிலையில், சாரதி கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
Srilanka Tamil News
0 Comments