கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 இளம் பெண்கள் கைது!!
கொழும்பு: கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று 2 இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த இரண்டு பெண்கள், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்கள், பொலநறுவை மற்றும் நாரம்மல பகுதிகளில் உள்ள 32 மற்றும் 23 வயதுடைய பெண்கள் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில், இருவரும் சுற்றுலா விசாக்கள் மூலம் டுபாய்க்கு சென்றதாகவும், அங்கு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாடு திரும்பி கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இவர்களின் சட்டவிரோத செயல் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தொடர்ந்தும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
Srilanka Tamil News
0 Comments