2025 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கைக்கு சபாநாயகர் அங்கீகாரம்!!
கொழும்பு, மார்ச் 21: 2025 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கான மூன்றாம் வாசிப்பு இன்று (21) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தனது அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.
ஆதரவாக: 159 வாக்குகள்
எதிராக: 45 வாக்குகள்
மேலதிகம்: 114 வாக்குகள்
இதன் மூலம் 2025ஆம் ஆண்டு 3ம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.
பெப்ரவரி 17 – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது நிதி அமைச்சர் பதவியில் இருந்து வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு உரையை (Budget Speech) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பெப்ரவரி 18 - 25 – 7 நாட்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நடைபெற்றன.
பெப்ரவரி 25 – வாக்களிப்பில் 109 மேலதிக வாக்குகளுடன் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.
பெப்ரவரி 27 - மார்ச் 21 – 19 நாட்கள் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நடைபெற்றன.
மார்ச் 21, மாலை 7.40 – மூன்றாம் வாசிப்பு மீதான இறுதிப் பயணமான வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 79வது பிரிவு
2025 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 79வது பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்று சட்டமாக அமலுக்கு வருகிறது.
இந்த வரவு-செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்புகள், கல்வி, சுகாதாரம் மற்றும் முக்கிய பொது திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
Srilanka Tamil News
0 Comments