Ticker

10/recent/ticker-posts

பாழடைந்த கிணற்றில் இருந்து 3 கைத்துப்பாக்கிகள் மீட்பு!!

 பாழடைந்த கிணற்றில் இருந்து 3 கைத்துப்பாக்கிகள் மீட்பு!!

கடுவலை: கடுவலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று கைத்துப்பாக்கிகள் இன்று (11) மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான, சுமார் 45 அடி ஆழமுள்ள கிணற்றில் பல பொலித்தீன் கட்டுகளில் மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


மீட்கப்பட்ட ஆயுதங்கள்:

🔹 இரண்டு வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள்

🔹 ஒரு ரிவோல்வர்

🔹 153 தோட்டாக்கள்


இதுவரை சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை. ஆயுதங்களை யார் மறைத்து வைத்தார்கள், எந்த நோக்கத்தில் இதை பயன்படுத்த திட்டமிட்டிருந்தார்கள் என்பதற்கான விசாரணைகளை கடுவலை போலீஸார் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments