யாழில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல்!!
யாழ்ப்பாணம் - மார்ச் 22, 2025:
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரை பகுதியில், 154 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவப் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த விசேஷ அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கடற்றொழில் படகு கைப்பற்றப்பட்டது – கைது எவரும் இல்லை
போதைப்பொருள்கள் கடல்மூலம் கடத்தப்படுவதாக உள்ள தகவலினை அடுத்து, பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையின் போது ஒரு கடற்றொழில் படகு கைப்பற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கை
சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை பொலிஸ் தலைமையகம் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
🔴 மேலும் தகவல்கள் வெளிவந்தவுடன் புதுப்பிக்கப்பட்ட செய்திகளை வழங்குவோம்.
Srilanka Tamil News
0 Comments