Ticker

10/recent/ticker-posts

தமிழர் பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

தமிழர் பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் உள்ள கரடியனாறு மகா வித்தியாலயத்தில் இன்று (மார்ச் 11) காலை சிற்றுண்டிச்சாலையில் விற்கப்பட்ட உணவினால் 54 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை இடியப்பம், புட்டு, இட்டலி மற்றும் நூடில்ஸ் ஆகிய உணவுகளை மாணவர்கள் சாப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், பகல் ஒரு மணியளவில் மாணவர்கள் வாந்தியெடுக்க தொடங்கியதால் பெரும் பதற்ற நிலை உருவானது. அதன்பின், 32 ஆண்கள் மற்றும் 22 பெண்கள் உள்ளிட்ட 54 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சில மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

சம்பவத்துக்குப் பின்பு, பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையில் பழுதடைந்த நூடில்ஸ் விற்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சிற்றுண்டிச்சாலை நடத்தி வந்த பெண் உரிமையாளரை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் கரடியனாறு பொலிஸாரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரியும், பொதுச்சுகாதார பரிசோதகர்களும், மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளனர்.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments