AI தொழில்நுட்பத்தால் இலங்கை சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!!
கொழும்பு: இலங்கையில் AI தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சில சிறுவர்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களின் நண்பி சிறுமிகளின் புகைப்படங்களை மாற்றியமைத்து, இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் கண்டிக்கப்பட்டது.
"இது ஒரு விளையாட்டாக செய்தது என அவர்கள் கூறினாலும், இது மோசமான செயல். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தனியுரிமையும், மனநிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது," என பெற்றோர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். அனுமதி இல்லாமல் பிறரின் புகைப்படங்களை மாற்றியமைத்தல் மற்றும் இணையத்தில் பகிர்வது சைபர் குற்றச்சட்டத்தின் கீழ் குற்றமாகும் என சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
AI தொழில்நுட்பத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை குறைக்கும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு AI மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பாக கல்வி வழங்கப்பட வேண்டும்.
சமூக ஊடக நிறுவனங்கள் இத்தகைய தவறுகளை தடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Srilanka Tamil News
0 Comments