சிறை செல்ல தயாரான நாமலை ஏமாற்றிய அநுர அரசு!!
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய உள்ளதா என்ற எதிர்பார்ப்பு நீடித்த நிலையில், அவர் சுமார் ஐந்து மணி நேரங்கள் விசாரணை முடிந்த பின் வெளியேறினார்.
தென்னிலங்கை ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, நாமல் ராஜபக்ச கைது செய்யப்படலாம் என்ற அந்நாளின் சூழ்நிலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணைக்கு முன்னதாகவே அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் சட்டத்துறை நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்படாமல் வெளியேறியதை, அதிகாரிகள் மீது அரசியல் அழுத்தம் இருந்ததா? அல்லது தெளிவான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லையா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
முன்னாள் ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற நிதி மோசடி, அதிகார துஷ்பிரயோகம், அரசுப் பண மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தற்போதைய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ள நிலையில், நாமல் ராஜபக்ச மீதான விசாரணை அடுத்த கட்டத்தை எட்டுமா? என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.
Srilanka Tamil News
0 Comments