Ticker

10/recent/ticker-posts

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை பெண்: வெளியான பிண்ணனி!!

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை பெண்: வெளியான பிண்ணனி!!

கனடாவின் மார்க்கம் (Markham) பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்கம் பகுதியில் உள்ள வீட்டொன்றில் கடந்த இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கனேடிய பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 20 வயது இலங்கைப் பெண் நிலாக்ஷி ரகுதாஸ் (Nilakshi Raghudas) உயிரிழந்துள்ளார். மேலும், வீட்டில் வளர்க்கப்பட்ட நாயும் உயிரிழந்ததுடன், 26 வயது ஆண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது கடந்த அனைத்து தாக்குதல்களுடன் தொடர்புடையதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2018 முதல் இந்த வீட்டில் பல முறை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார் குடியிருப்பாளர்களுடன் கூட்டம் நடத்தி எச்சரித்திருந்த போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் கருப்பு நிற நான்கு கதவுகள் கொண்ட வாகனத்தில் இரண்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனேடிய கொலை விசாரணைப் பிரிவு (Homicide Investigation Unit) இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்களை பொலிஸார் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும்.

Srilanka Tamil News








Post a Comment

0 Comments