பௌத்த மக்களை நோக்கி ரணில் நகர்த்திய காய்: அம்பலமானது உண்மை முகம்..!!
ரணில் விக்ரமசிங்கின் சர்வதேச நேர்காணல் – பௌத்த மக்களுக்கு அவமானமான கருத்துக்கள்!
சர்வதேச ஊடகமான அல்ஜசீராயுடன் நடத்திய ஹெட் டூ ஹெட் நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிட்ட கருத்துக்கள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.
நேற்று முன்தினம், காரசாரமான நேர்காணலில், ரணில் விக்ரமசிங்கின் பதவிக்காலங்களில் ஏற்பட்ட முக்கிய அசம்பாவிதங்கள் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து கேள்விகள் தொடுக்கப்பட்டன. இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய கேள்விகளுக்கு அவர் பொறுப்பற்ற பதில்கள் அளித்தார்.
மேலும், "இந்த நாட்டில் பௌத்தர்களே பெரும்பான்மை இனத்தவர்கள், மகா சங்கத்தினருக்கு அடுத்து தான் ஏனைய அதாவது, கத்தோலிக்க திருச்சபையோ அல்லது ஏனைய மதத்தவர்கள்" என்ற கூற்றை முன்னாள் ஜனாதிபதி முன்வைத்தார்.
இந்த வகையான கருத்தை, ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்கு விளக்கம் அளிக்கும் நேரத்தில் முன்வைத்திருப்பது, பௌத்த மக்களை தம்வசப்படுத்துவதற்காக என்று தொடர்புடைய விமர்சனங்களை தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஊடக இணைப்பாளர், தா.க ஐன்ஸ்டீன் தெரிவித்தார்.
லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில், ஐன்ஸ்டீன் கூறியதாவது: "ரணில் விக்ரமசிங்க தன்னை பௌத்தராக சொல்லிக் கொள்ளும் அளவு அவர் அவ்வாறு நடந்து கொண்டதில்லை" எனவும், அவர் மேலதிக விவரங்களை வழங்கினார்.
Srilanka Tamil News
0 Comments