மன்னார் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய இளைஞர் குழு!!
மன்னார், மார்ச் 11: எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக, இளைஞர் குழு ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
மன்னார் நகர சபை மற்றும் நானாட்டான் பிரதேச சபை ஆகிய இரண்டு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக, நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.எம். சீலன் தலைமையிலான இளைஞர் குழுவே இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
இது குறித்து ஜி.எம். சீலன் தெரிவித்ததாவது:
"மன்னார் மாவட்டத்தில் இளைஞர்களின் அரசியல் பங்குபற்றலை அதிகரிக்கவும், மக்களின் தேவைகளை நேரடியாக முன்வைக்கவும் இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளோம். மக்கள் ஆதரவைப் பெற்றே வெற்றி பெறுவோம்" எனக் கூறினார்.
இந்த தேர்தலில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க முன்வந்திருப்பது, அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
— Srilanka Tamil News
0 Comments