Ticker

10/recent/ticker-posts

யாழில் ஒரு தொகை கஞ்சா மீட்பு!!

யாழில் ஒரு தொகை கஞ்சா மீட்பு!!

இன்று (27) காலை, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிகண்டிப் பகுதியில் இராணுவப் பலனாய்வுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரும் இராணுவமும் சோதனை நடத்தினார்கள். அதன் மூலம், பழைய வீடொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட 75 கிலோ கிராமிற்கு மேலான கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையில் யாரும் கைதுசெய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் வல்வெட்டித்துறை பொலிஸாரின் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments