Ticker

10/recent/ticker-posts

யாழில் மீட்கப்பட்ட இனந்தெரியாத நபரின் சடலம் : வெளியான தகவல்!!

யாழில் மீட்கப்பட்ட இனந்தெரியாத நபரின் சடலம் : வெளியான தகவல்!!

யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தி அருகே உள்ள வாய்க்காலில் கடந்த மார்ச் 26ஆம் திகதி மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபரின் சடலம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணைகளின் பின்னர், குறித்த நபர் முல்லைத்தீவு - ஒட்டிசுட்டான், வித்திராபுரம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த மார்ச் 12ஆம் திகதி தனது வீட்டை விட்டு வெளியேறி யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர், இருபாலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர் மது அருந்துவதற்காக யாசகம் பெற்று வந்த நிலையில், மது போதையில் பாதிப்படைந்து, கோப்பாய் சந்தி அருகே உள்ள வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.


சடலத்திற்கான திடீர் மரண விசாரணைகளை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார். உடற்கூற்று பரிசோதனைகளின் முடிவில், கழுத்து எலும்பில் ஏற்பட்ட உடைவு காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடருகின்றன.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments