யாழில் பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் காயம்!!
பருத்தித்துறை - பொன்னாலை வீதி, கடற்கரை வீதியில் இன்று (மார்ச் 2) காலை, அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸாரின் கட்டளையை மீறி டிப்பர் பயணித்ததால், அவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில், இன்னொருவர் காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கும்போது புதுப்பிக்கப்பட்ட செய்திகள் வழங்கப்படும்.
Srilanka Tamil News
0 Comments