இராணுவம் தொடர்பாக அநுரவின் அதி முக்கிய முடிவு!!
கொழும்பு: இலங்கை அரசாங்கம் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி, இலங்கை இராணுவத்திற்கான நிதியை குறைத்து, கடற்படைக்கு அதிகமாக ஒதுக்கியுள்ள முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது.
இலங்கை ஒரு தீவு நாடாக இருப்பதால், நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கடற்படையின் பங்கு மிக முக்கியமானது. எதிர்காலத்தில் எந்தவொரு அபாயமும் கடல் வழியாக வரக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முந்தைய காலங்களில் இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது. எனினும், இதுவரை அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
"இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகமாக வைத்திருக்க அரசாங்கம் விரும்பும் காரணம், எந்தவொரு எதிர்ப்பையும் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற நோக்கமே," என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய, எமது ஊடறுப்பு நிகழ்ச்சி விரிவாக ஆய்வு செய்து வருகிறது.
Srilanka Tamil News
0 Comments