கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் உட்பட இருவர் கைது!!
கட்டுநாயக்க: கட்டுநாயக்க விமான நிலையத்தில், வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 39,200 சிகரட்டுகளுடன் பெண் மற்றும் இளைஞன் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள், விமான நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அந்த சோதனையில், அவர்களுடைய பயணப்பொதிகளிலிருந்து 58 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான 39,200 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் 196 சிகரட்டு காட்டுன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, எதிர்வரும் 12 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையாவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Srilanka Tamil News
0 Comments