அநுராதபுரம்: பெண் மருத்துவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது!!
அநுராதபுரம் – அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேக நபர் இன்று (12) காலை கல்நேவ பிரதேசத்தில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டிருந்ததோடு, அவரைத் தேடுவதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. தற்போது, அவரை கைது செய்துள்ள பொலிஸாரின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவம், அநுராதபுரம் மருத்துவமனையில் நடந்த கொடூரமான நிகழ்வாகவும், அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரின் அதிகாரப்பூர்வ விசாரணையின் அடிப்படையில் குற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Srilanka Tamil News
0 Comments