Ticker

10/recent/ticker-posts

யாழில் மீட்கப்பட்ட இனந்தெரியாத நபரின் சடலம்!!!

யாழில் மீட்கப்பட்ட இனந்தெரியாத நபரின் சடலம்!!!

யாழ். பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள வாய்க்காலில் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று (26-03-2025) மீட்கப்பட்டுள்ளது.


மீட்கப்பட்ட நபர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் அல்லாதவராக இருக்கலாம் என்றும், யாசகம் பெறுபவராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவரது வயது 70 முதல் 75 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மரண விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார். மரணத்திற்கான காரணம் குறித்து உடற்கூறாய்வு செய்யப்படவுள்ளது.


அந்த நபரை அடையாளம் காண உறவினர்கள் யாரேனும் முன்வருமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments