Ticker

10/recent/ticker-posts

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளரின் தாயாரும் சகோதரிகளும் கைது!!

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளரின் தாயாரும் சகோதரிகளும் கைது!!

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் ஒரு ஆசிரியை மண்வெட்டியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தனியார் நிதி நிறுவன முகாமையாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்றுமுன்தினம் (22.03.2025) நடந்த இந்த தாக்குதலில், நிதி நிறுவன முகாமையாளரான ஒருவன், ஆசிரியை ஒருவரை மண்வெட்டியால் சராமரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.


பின்னர், அவரின் தாயாரும், இரண்டு சகோதரிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இன்றையதினம் (24.03.2025) இவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால், தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்பட்ட தனியார் நிதி நிறுவன முகாமையாளரான நபர் இன்னும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.


பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments