முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19.03.2025 அன்று மாலை, கேப்பாபிலவு பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலில், சந்தேகநபர் தனது மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். விசாரணைகளின் போது, அவர் சட்டவிரோதமாக ஒரு இடியன் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர். சந்தேகநபர் 20.03.2025 அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதோடு, எதிர்வரும் 14 நாட்களுக்கு (02.04.2025 வரை) தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முள்ளியவளை பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Tamil News
0 Comments