Ticker

10/recent/ticker-posts

வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள அறிவிப்பு!!

 வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள அறிவிப்பு!!

கொழும்பு: வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவரின் அறிவிப்பின்படி, தனியார் வேலைவாய்ப்பு முகவர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய 1989 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கலாம். இதன் மூலம், அவர்கள் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.


மேலும், SLBFE (Sri Lanka Bureau of Foreign Employment) அனுமதி பெற்ற வேலைவாய்ப்பு முகவர்களின் பட்டியல் மற்றும் கட்டண விவரங்களை SLBFE இணையதளத்தில் பார்வையிடலாம். வேலைவாய்ப்பு முகவர்களின் மோசடிகளை தடுக்கும் நோக்கில், மக்கள் இதனை சரிபார்த்த பிறகு மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.


இதேவேளை, அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பணம் வசூலித்தாலோ, அனுமதி இல்லாமல் வேலையாற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டாலோ, பொதுமக்கள் SLBFEயில் உத்தியோகபூர்வ முறையில் முறைப்பாடு செய்யலாம்.


இந்த நடவடிக்கைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Srilanka Tamil News


Post a Comment

0 Comments