லண்டனில் இருந்து வருகை தந்த இலங்கையர் கிளிநொச்சியில் கைது!!
கிளிநொச்சி, மார்ச் 30 – கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இன்று (30) லண்டனில் இருந்து வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகவலின்படி, குறித்த நபர் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரியபோது, தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சதுரங்க அவர்களுக்கு 50,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாக வழங்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸ் நிலையத்திற்குள் பணம் வழங்க முயன்ற சந்தேக நபரை நிலைய பொறுப்பதிகாரியே நேரடியாக கைது செய்து, மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சதுரங்க தெரிவித்துள்ளதாவது:
"சந்தேக நபர் இன்று (30) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார். இலஞ்சம் வழங்குதல் என்பது சட்டவிரோதமான செயலாகும். இது தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன."
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளிவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Srilanka Tamil News
0 Comments